உலகம் முழுவதும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலியாக இணைந்து பதாகைகளை ஏந்தியவாறு நின்று மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உலக தாய்ப்பால் வாரம்: மாணவர்கள் மனித சங்கிலி - Stanly hospital
சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Stanly hospital
இதில் ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் சாந்திமலர், நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வாரமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.