தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தபால்காரரை போல் செயல்படக் கூடாது... மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்! - சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்

'ஆவணங்களே இல்லாத புகார் மீது வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டு தபால்காரரை போல் செயல்படக்கூடாது' என சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

chennai high court  saidapet magistrate  chennai high court warn saidapet magistrate  chennai news  chennai latest news  சென்னை உயர் நீதிமன்றம்  சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்  சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
chennai high court

By

Published : Jul 31, 2022, 12:27 PM IST

சென்னை: கரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை வழிமறித்த போலீசார், முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தினர். அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததால், வழக்கறிஞரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், தன்னை தாக்கியதாக பெண் வழக்கறிஞரின் கணவர், வடபழனி காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில், ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், “காவலர் தாக்கியதற்கு ஆதாரமாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றதாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மருத்துவச்சான்றிதழில் பெண் வழக்கறிஞரும், அவரது கணவரும் தாக்கப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது டாக்டர்கள் எழுதிக்கொடுத்த வைட்டமின் மாத்திரைச்சீட்டு என்பதைக் கூட பார்க்காமல், இயந்திரத்தனமாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு, தபால்காரரைப் போல மாஜிஸ்திரேட்டு செயல்படக்கூடாது எனவும், இதுபோல புகார் மனு தாக்கல் செய்யும்போது, அதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதி, காவல் ஆய்வாளரை பழிவாங்க அளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு - திருப்பத்தூர் கல்லூரி மாணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details