தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Lingusamy: செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டணைக்கு தடை! - இயக்குநர் லிங்குசாமி

காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனைக்கு தடை விதித்து சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lingusamy
Lingusamy

By

Published : Apr 24, 2023, 12:38 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி. ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். மேலும் ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி, பையா, வேட்டை வழக்கு எண் 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரிக்கவும் செய்து உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, சம்ந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படம் தயாராக இருந்தது. இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்திற்காக நான் ஈ, இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த லிங்குசாமி தரப்பு காசோலை கொடுத்ததாகவும், அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் கூறி பி.வி.பி. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி உத்தரவிட்டது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்தது. இதில் லிங்குசாமியின் மனுவை தள்ளுபடி செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், மற்றும் அதன் நிர்வாகிகளான இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி வி.சிவஞானம் அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த மனு நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காசோலையில் குறிப்பிடப்பட்டு உள்ள தொகையில் 20 சதவீதம் ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும், தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் இயக்குனர் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 20 சதவீத தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத கால சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க :G Square IT Raid: திருச்சி ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details