தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஒவ்வொரு முறையும் உயிர்பலி வேண்டுமா?’ - அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஒவ்வொரு விஷயத்திலும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உயிர் பலி ஏற்படவேண்டுமா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

chennai high court

By

Published : Oct 29, 2019, 3:04 PM IST

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வியில்,

  • எதிலும் உயிர் பலி ஏற்பட்டால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா?
  • இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது?
  • அவற்றில் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
  • இந்த விவகாரத்தில் விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
  • அரசு கொண்டுவந்த விதிகள் மக்களால் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா?

இவ்வாறு சரமாரியாகக் கேள்வி எழுப்பி வரும் நவம்பர் 21ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் எனவும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்கள் முன்வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details