தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவசங்கர் பாபா - காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - சென்னை உயர்நீதி மன்றம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

petition filed by sivasankar baba  chennai high court  sivasankar baba petition  sivasankar baba case  sexual harassment case  பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  பள்ளி மாணவிகாளுக்கு பாலியல்  சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கு  சென்னை உயர்நீதி மன்றம்  சிவசங்கர் பாபா மனுக்கு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதி மன்றம்

By

Published : Apr 5, 2022, 7:07 AM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இதில், கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன் மீதான வழக்குகளில் இரண்டு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கு, இன்று (ஏப். 4) நீதிபதி சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தது.

வாதங்களும், தீர்ப்பும்:அப்போது, சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், “2010ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு, 2021ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்குகளை ரத்து வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், “வழக்குப்பதிவு செய்வதில் எந்த தாமதமும் இல்லை. புகார் மட்டுமே தாமதமாக அளிக்கப்பட்டது. இதனை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது” என்றார். மேலும் சிவசங்கர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் மைனர் எனவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சிவசங்கர் பாபா மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார். பின் இவ்வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: காமராஜர் சிலை அமைக்கக்கோரிய மனு - நெல்லை ஆட்சியர் பரிசீலிக்க மதுரைக்கிளை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details