கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சயான், மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, உதயன், ஜிதின் ஜாய், ஜாம்ஷேர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைசருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இதனால் வழக்கின் திசைமாறி போய்விடும் என்பதால் சயான், மனோஜ் ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் சிறையிலடைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 8ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், மனோஜ் ஆகியோர் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.