உறவினர்களிடம் வாட்ஸ்அப் மூலம் பேச அனுமதி கேட்டு ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கு இன்று காணொலி காட்சி மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு! - Today News
சென்னை: உறவினர்களிடம் வாட்ஸ்அப் மூலம் பேச அனுமதி கேட்டு ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் அரசை கண்டித்துள்ளது.
Chennai HC Warns TN Govt on Nalini Petition
அதில், நளினி, முருகன் தமிழர்கள்தானே? சட்டப்பேரவையில் ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஏன் இந்த முரண்பாடு? அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசை கண்டித்து வலியுறுத்தியுள்ளது.
மேலும், இது குறித்தான அரசின் பதிலை நாளை தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.