தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குநர் மு.களஞ்சியத்துக்கு நிபந்தனை முன் ஜாமின் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சியை விமர்சித்து கடுமையாக பேசியாக இயக்குநர் மு.களஞ்சியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : May 17, 2019, 8:10 AM IST

இவரது பேச்சு தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில், இரு தரப்பினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக, இயக்குனர் மு. களஞ்சியத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என அஞ்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு, மு.களஞ்சியம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினருக்கும் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அவதூறாக எதுவும் பேசவில்லை. இவரது பேச்சைத் தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மனுதாரர் மீது பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் வாதிட்டார்.

இதையடுத்து, இயக்குநர் மு. களஞ்சியத்துக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், இயக்கநர் மு. களஞ்சியத்துக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் செலுத்தி, எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம். விசாரணை அதிகாரி முன் தினந்தோறும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details