சென்னை: கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் வேகமாகப் பரவிவருகிறது. மாநகராட்சி, சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், நோய் தாக்கம் குறையாமல் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய்ப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து நபர்களுக்கு கரோனா ஏற்பட்டால் அந்த முழுத் தெருவையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துவருகின்றனர்.
அதன்படி, சென்னையில் தற்போது 30 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லக்கூடாது, உள்ளே இருப்பவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது.
இந்த 30 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான வசதிகளை மாநகராட்சி தன்னார்வலர்கள் செய்துவருகின்றனர். இதன் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.
திருவொற்றியூர் - 3
மணலி - 7