சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" மூலம், கஞ்சா மற்றும் போதை பொருள்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் அசோக் நகர் உதவி ஆணையர் மேற்பார்வையில், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று எம்.ஜி.ஆர் நகர் மற்றும் நெசப்பாக்கம் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அவ்வழியே வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட (Honda Amaze) காரை நிறுத்தி விசாரணை செய்தனர்.