தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்களின் மனைவிகளுடன் உறவு வைத்திருந்தவர் கொலை; 9 பேருக்கு ஆயுள் - தகாத உறவு

சென்னை: நண்பர்களின் மனைவிகளுடன் உறவு வைத்திருந்த இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

murder

By

Published : Jul 25, 2019, 11:42 PM IST

Updated : Jul 26, 2019, 8:31 AM IST

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது நண்பர்களின் மனைவிகளுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரிந்ததால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2008 பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கார்த்திக்கை திருமங்கலம் அருகே கொலை செய்தனர்.

இது தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஒன்பது பேரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சமீனா, குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Last Updated : Jul 26, 2019, 8:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details