சென்னை மாநகராட்சி கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது, ஒலி பெருகி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கரோனா பரிசோதனைக்கு மக்களை அழைத்து வர வாகனங்கள்: மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு - prakash inagurated ford van
சென்னை: கரோனா பரிசோதனைக்கு மக்களை அழைத்து வருவதற்கு ஃபோர்டு இந்தியா மோட்டார்ஸ் சார்பில் வழங்கப்பட்ட 25 வாகனங்களை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இதன் அடுத்த கட்டமாக கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஃபோர்டு இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட 25 வாகனங்களை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் மதுசுதன் ரெட்டி, துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், ஃபோர்டு இந்தியா மோட்டார்ஸ் நிர்வாகி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.