சென்னை விமானநிலையம் பகுதியில் இன்று காலை 6.30 மணியிலிருந்து 8 மணிவரை கடுமையான பனிமூட்டம் இறுந்தது. அதன்காரணமாக கோலாலம்பூர், சார்ஜா, திருவனந்தபுரம், மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து வரும் விமானங்கள் உள்பட ஏழு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டன.
பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் கடும் பாதிப்பு - Chennai Airport flights
சென்னை: விமான நிலையம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
Chennai flight delayed
அதைப்போல் சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 10 விமானங்கள் 2 மணி நேரம்வரை தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க: மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்ட்டி லெவல் பார்க்கிங் வசதி.
Last Updated : Jan 3, 2020, 11:51 AM IST