தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா 2ஆம் அலை: வெறிச்சோடி காணப்பட்ட சென்னை விமான நிலையம் - chennai district news

சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால்,சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் 42 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

chennai flight cancelled
chennai flight cancelled

By

Published : Apr 27, 2021, 1:34 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகரம் அதைச் சுற்றியுள்ள புறநகா்ப் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் கட்டுக்கடங்காமல் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

அதைப்போல் விமான பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை சான்றிதழ், வெளிமாநிலப் பயணிகளுக்கு கட்டாய இ-பாஸ் முறை போன்றவைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதைப்போன்ற கடுமையான கட்டுப்பாடுகள், அதோடு சென்னை, புறநகரில் வேகமாக பரவும் கரோனா பீதியால் சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

முழு ஊரடங்கு தினமான கடந்த ஞாயிறு அன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை நான்காயிரமாகவும், சென்னையிலிருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை ஐந்தாயிரமாகவும் மொத்தம் ஒன்பது ஆயிரமாக இருந்தது.

ஆனால் இன்று (ஏப். 27) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை பயணிகள் மூன்று ஆயிரமாகவும், புறப்பாடு பயணிகள் நான்கு ஆயிரமாகவும் மொத்தம் ஏழு ஆயிரமாக குறைந்துள்ளது.

அத்தோடு சென்னை விமான நிலையத்தில் இன்று (ஏப். 27) போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, இந்தூா், அந்தமான், புவனேஸ்வா், மதுரை உள்ளிட்ட 42 உள்நாட்டு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அதில் 21 விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவைகள், 21 விமானங்கள் சென்னைக்கு வருபவைகள். இவைகள் தவிர சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று 83 வருகை விமானங்கள், 79 புறப்பாடு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அவைகளும் போதிய பயணிகள் இல்லாமல் காலியாகவே இயக்கப்படுகின்றன. கொச்சி விமானத்தில் மூன்று பயணிகள், கோழிக்கோடு ஐந்சு பயணிகள், ராஜமுந்திரி ஆறு, விசாகப்பட்டினம் ஏழு, ஹைதராபாத் எட்டு, திருச்சி, திருவனந்தபுரம் தலா ஒன்பது பயணிகள் என்று பல விமானங்கள் சென்னையில் காலியாகப் பறக்கின்றன.

கரோனா இரண்டாம் அலையின் கடுமையான தாக்கமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க: கரோனாவால் தொலையும் மனிதாபிமானம்...

ABOUT THE AUTHOR

...view details