தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 39 வழக்குகள் பதிவு! - chennai news

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, சென்னையில் இதுவரை 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் விதிமீறல்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 39 வழக்குகள் பதிவு

By

Published : Mar 10, 2021, 4:31 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான சுவரொட்டி, பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த, கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், கண்காணிப்பு குழு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். தேர்தலின் போது எவ்வித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் குற்ற பதிவேடு ரவுடிகளைக் கண்டறிந்து காவல் துறையினர் சிறையிலும் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்.28ஆம் தேதி முதல் இன்று (மார்ச்.10) காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 39 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், பணம், விலையுயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உரிமம் பெற்ற 1,749 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த காவல்துறையினர், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1,332 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் 6 மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:அப்பரண்டிஸ் அமர்களம்: பிறந்த நாள் கொண்டாடிய சேலம் ரவுடி கைது!

ABOUT THE AUTHOR

...view details