சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'வாக்கு எண்ணிக்கை நாளை 8 மணிக்கு தொடங்கும். 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரம் முன்பே தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் என அனைவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் பணியமர்த்தப்படுவர். தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும்' என்று தெரிவித்தார்.
'வாக்கு எண்ணிக்கை முடியும் நேரத்தை கணக்கிட முடியாது' - சத்ய பிரத சாகு - election commission officwer
சென்னை: "தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் காலநேரத்தை கணக்கிட முடியாது" என்று, தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 நுண் பார்வையாளர்கள் அந்தெந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் பார்வையாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிப்பார். வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் அறையின் சீல் உடைத்து பெட்டிகள் எடுக்கப்படுவது முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடியும் வரை அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
results.eci.gov.in என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் ஹெல்ப்லைன் (Voters Helpline) என்ற செயலி மூலமும் அனைவரும் தெரிந்துக் கொள்ளலாம். திருவள்ளூரில் அதிகபட்சமாக 34 சுற்றுகளும், குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 19 சுற்றுகளும் நடைபெறவுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடையும் காலநேரத்தை கணக்கிட முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.