சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப்பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 800 முதல் 1000 வரையிலான நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்றுச்செல்கின்றனர்.
எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு! - கூடுதல் கட்டடத்திற்கு நிதி
சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அதிநவீன வசதியுடன் கண் சார்ந்த அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் அமைக்க தமிழ்நாடு அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
egmore eye hospital
இங்கு சிகிச்சைப் பெறவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் போதுமான இடவசதி இல்லை என்பதாலும் கூடுதல் கட்டடம் ஏற்படுத்தித் தர மருத்துவக் கல்வி இயக்கம் அரசிடம் கோரிக்கைவிடுத்திருந்தது.
இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று புதிய அதிநவீன வசதிகளுடன் கட்டடம் கட்டுவதற்காக 65 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.