தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேமர் மதனின் யூ-ட்யூப் சேனலை முடக்க கடிதம் அனுப்பிய காவல் துறை - கேமர் மதனின் யூடியூப் சேனலை முடக்க கடிதம்

கேமர் மதனின் சேனல், இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தினருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai cyber crime
கேமர் மதன்

By

Published : Jun 14, 2021, 2:05 PM IST

சென்னை: பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசியதாகவும், யூ-ட்யூப் சேனலில் பணம் பறிப்பு மோசடியில் ஈடுபட்டதாகவும் யூ-ட்யூப் கேமர் மதன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திட, மதனை இன்று (ஜூன் 14) நேரில் முன்னிலையாகும்படி புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், மதன் காவல் துறையினர் முன்னிலையில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருந்துவருகிறார்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், "யூ-ட்யூபர் மதனின் சேனல், இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தினருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வி.பி.என். சர்வரைப் பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மாற்றிவருவதால், அவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்ட பின்பு, அவர் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பான முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details