சென்னை: உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய் பிடிக்கும் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களுக்கான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை இன்று (செப்.27) பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடக்கி வைத்தார்.
உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெறிநாய்க்கடி நோய் தாக்கத்தில் இருந்து பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாத்திடும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை தொடக்கி வைத்து, நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கு சீருடைகள், காலணிகள், கையுறைகள் மற்றும் நாய் பிடிக்கும் வலைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேயர் பிரியா பேசியபோது, “ரேபிஸ் நோய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நோய் பாதித்த நபர் மற்றும் அவரின் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்றும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும், நாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் பரவும் என்றில்லாமல், என்னென்ன விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்றும் இன்று சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.