சென்னை:சென்னையை அழகுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை 45,900 இடங்களில் மொத்தம் 1,37,267 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பேனர்களை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் மேலும், பசுமையாகும் சென்னை என்ற திட்டத்தின் கீழ், சென்னை வாழ் மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சி 52,027 மரக்கன்றுகளை இதுவரை நட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க தற்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். பேனர்களை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் நேற்று (செப். 5) மட்டும் கந்தன்சாவடி, பெருங்குடி. வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி பாலத்தில் மற்றும் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உஸ்பெகிஸ்தான் ஆணகழகன் போட்டியில் கலந்துகொள்ளும் காவலருக்கு காவல் ஆணையர் உதவி!