தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது.
சென்னையில் 774 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: மாநகராட்சி அறிவிப்பு - containment zones
சென்னை: கரோனா வைரசால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 774 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடு இருக்கும் தெருக்களைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து, அதனை தடுப்புகள் அமைத்து மூடியுள்ளது. அதன்படி மாநகரில் இதுவரை 774 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
- ராயபுரம் - 162 பகுதிகள்
- திரு.வி.க. நகர் - 124 பகுதிகள்
- வளசரவாக்கம் - 24 பகுதிகள்
- தண்டையார்பேட்டை - 21 பகுதிகள்
- தேனாம்பேட்டை - 78 பகுதிகள்
- அம்பத்தூர் - 65 பகுதிகள்
- கோடம்பாக்கம் - 51 பகுதிகள்
- திருவொற்றியூர் - 39 பகுதிகள்
- அடையாறு - 24 பகுதிகள்
- அண்ணா நகர் - 19 பகுதிகள்
- மாதவரம் - 63 பகுதிகள்
- மணலி - 46 பகுதிகள்
- சோழிங்கநல்லூர் - 23 பகுதிகள்
- பெருங்குடி - 19 பகுதிகள்
- ஆலந்தூர் - 16 பகுதிகள்
தொடர்ந்து 28 நாட்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று இல்லை என்றால், அந்தப் பகுதிக்கு தளர்வு பகுதியாக அறிவிக்கப்படும். அதுபோல் இன்று மட்டும் 379 தனிமைப்பட்ட பகுதிகள் தளர்வு பகுதியாக மாறியுள்ளது, இதில் அதிகபட்டசமாக ராயபுரத்தில் 72 பகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.