தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Corporation of Chennai: பொது கழிப்பறைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க முடிவு!

Corporation of Chennai: சென்னை மாநகராட்சியின் பொது கழிப்பறைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையின் பொது கழிப்பறைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க முடிவு
சென்னையின் பொது கழிப்பறைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க முடிவு

By

Published : Jan 22, 2023, 6:03 PM IST

Corporation of Chennai:சென்னை: மாநகராட்சியில், பல்வேறு பொது இடங்களில் 800-க்கும் மேற்பட்ட இலவச பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மக்கள் அதிகம் கூடக்கூடிய சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி பேருந்து நிலையம், சந்தைப் பகுதி, போக்குவரத்து அதிகம் உள்ள சாலை, என மக்கள் அதிகம் கூடும் வாய்ப்புள்ள பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் நிதியில் 420 கோடிக்கு புதிதாக கழிப்பிடங்கள் அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் இல்லாத நகரமாக சென்னையை அறிவிக்க மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் ஆட்சேபனை கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான பொது கழிப்பிட வசதியை உறுதி செய்ய, புதிதாக கட்டப்படும் கழிப்பிடம் மற்றும் ஏற்கனவே உள்ள கழிப்பிடங்களை முறையாகப் பராமரிக்க புதிய திட்டத்தை வரும் நிதியாண்டில் சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கழிப்பிடத்தைப் பராமரிக்கும் பணியினை தனியாருக்கு வழங்க மாநகராட்சி உத்தேசித்து உள்ளது. மேலும் தனியாருக்கு வழங்கும் பராமரிப்பு பணிக்கு, பராமரிப்பின் தரத்தை பொறுத்து பணம் வழங்கும் புதிய முறையில் ஒப்பந்தம் வழங்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. எடுத்துக்கட்டாக ஒரு குறிப்பட்ட ஆண்டுகள் கழிப்படங்கள் தனியாருக்கு வழங்கப்படும். அவர்களுக்கு பணம் வழங்க key performance indicator முறை நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்படி கழிப்படங்களை தூய்மையாக வைத்து இருத்தல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், விதிகளை முறையாக கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் தனியாரின் பணி ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். ஏற்கனவே சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் பணியினையும் தனியார் நிறுவனத்திற்கும் இந்த முறைப்படி ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இது பணியின் தரத்தை உறுதிசெய்வதுடன், பொத்தாம் பொதுவாக பணிக்கு பணம் வழங்குவதால் ஏற்படும் செலவினை குறைக்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சாலை கட்டுமானம், மழை நீர் வடிகால் பணிகள்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details