சென்னை: சென்னை மாநகராட்சியில் வீடு உட்பட அனைத்து கட்டடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில், அக்டோபர் மாத மாமன்ற கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சென்னையில் கட்டிட அனுமதிக்காகக் கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 1,000 சதுர அடிக்கு மேல் வீடுகள், கட்டிடங்கள் கட்டினால் அனுமதி கட்டணம் 100% வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம், தொழிற்சாலைகளின் தளப்பரப்பில் 100 சதுர மீட்டருக்கு (1,076 சதுர அடி) மேல் கட்டட பரப்பு இருந்தால் கட்டடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணம்: குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களுக்கு
- முதல் 40 சதுர மீட்டர்களுக்கு - 10 சதுர மீட்டருக்கு ரூ.90
- 41 முதல் 100 சதுர மீட்டர்களுக்கு - 10 சதுர மீட்டருக்கு ரூ.155
- 101 முதல் 400 சதுர மீட்டர்களுக்க - 10 சதுர மீட்டருக்கு ரூ.410
- 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் - 10 சதுர மீட்டருக்கு ரூ.1050 வசூல் செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க:ஒரே நாளில் 3 லட்சம்;10 மாதங்களில் 7 கோடி.. சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!