தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த சென்னை மாநகராட்சி முடிவு!! - சிங்கார சென்னை 2 0

சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 139 அரசுப் பள்ளிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பராமரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 1, 2023, 6:18 PM IST

சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டில் தற்போது 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 281 சென்னை மாநகராட்சி பள்ளிகள் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான மணலி, மாதவரம், திருவெற்றியூர், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள 139 அரசுப் பள்ளிகளை எடுத்து நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

139 பள்ளிகளை சென்னை மாநகராட்சி கையகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கிடைத்த பின்னர் நடவடிக்கைகள் முழுமை பெறும். பின்னர் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கும்.

இதன் மூலம் 300 ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் 800 வகுப்பறைகள் நவீன வசதிகள் பெறும் என கூறப்படுகிறது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த 54 கோடி தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு பிறந்தநாள் பரிசாக ஒட்டகம் முதல் பேனா சின்னமாதிரி வரை வழங்கிய தொண்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details