சென்னை: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு - சென்னை மாநகராட்சி ஆணையம்
சென்னை: ஆலந்தூர் மண்டலத்தை தவிர 14 மண்டலங்களிலும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளது.
சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்தாலும் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனால் குணமடைத்தவரின் சதவீதம் அதிகரித்து வருகிறது.
மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 625 நபர்கள் பாதிக்கட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 நபர்கள் குணடைந்துள்ளனர்.
அதாவது குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 92 விழுக்காடாக உள்ளது.
ஆலந்தூர் மண்டலத்தை தவிர 14 மண்டலங்களிலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காடுக்கும் மேல் உள்ளது.
அதிகபட்சமாக மணலியில் 94% நபர்கள் குணமடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ஆலந்துரில் 88% நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் இறப்பு சதவீதம் 1.96 ஆக உள்ளது.
மண்டல வாரியாக குணமடைத்தவரின் பட்டியல்,
கோடம்பாக்கம் - 16,137 பேர்
அண்ணா நகர் - 16,128 பேர்
ராயபுரம் - 13,935 பேர்
தேனாம்பேட்டை - 13,694 பேர்
தண்டையார்பேட்டை - 11,984 பேர்
திரு.வி.க. நகர் - 10,810 பேர்
அடையாறு - 11,062 பேர்
வளசரவாக்கம் - 9,281 பேர்
அம்பத்தூர் - 10,097 பேர்
திருவொற்றியூர் - 4,513 பேர்
மாதவரம் - 5,154 பேர்
ஆலந்தூர் - 5,448 பேர்.
சோழிங்கநல்லூர் - 4,084 பேர்
பெருங்குடி - 4,833 பேர்
மணலி - 2,253 பேர்