தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’முழுவதும் நீங்கவில்லை கரோனா.. கவனம் தேவை’: சென்னை மாநகராட்சி ஆணையர் - corona precaution take in chennai

சென்னை: கரோனா ஆபத்து முழுவதும் நீங்க இரு மாதங்களாகும், அதுவரை பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

chennai corporation commissioner prakash
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசிய காணொலி

By

Published : Jan 9, 2021, 10:46 AM IST

சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குப்பை அகற்றுதல், பராமரித்தல், புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை கண்காணிக்க ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுபாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்துவைத்தார்.

அதன் பின்னர் ஆலந்தூர் கண்காணிப்பு மையத்தில் செய்யப்படும் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பணிகளை எப்படி துரிதமாக செயல்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

திடக்கழிவு மேலாண்மை

தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், ’சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், கழிவுகள் எடையை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் பல்வேறு வகையில் கணக்கிடப்படுகிறது. தெருக்கள் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பையை ஏற்றி செல்லும் போது கீழே கொட்டக்கூட்டாது. பொதுமக்கள் புகார் உள்ளிட்ட 36 வகையான விதிமுறைகளுடன் கண்காணிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனம் அரசு ஒத்துழைப்புடன் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடந்து வருகின்றன. வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குப்பைகளை வாங்க 100 முதல் 150 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் தரப்பட்டுள்ளது. இதனால் வேலைப்பளு குறைந்து குப்பைகள் அகற்றும் பணியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தக் கண்காணிப்பு மையத்தின் மூலம் யார் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். வேறு எந்த மாதிரியான பிரச்னைகள் உள்ளன என்பதை கண்டறிந்து அடுத்த நாளே சரிசெய்யப்படும். ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு குப்பைகளை சேகரிக்கிறார் உள்ளிட்ட தகவல்களையும் கண்டறிய முடியும். இது இணைய இணைப்பின் மூலம் மாநகரட்சியிலும் கண்காணிக்கப்படும். இதைப் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசிய காணொலி

தூய்மைப் பணியாளர்கள்

குப்பைகளை அகற்ற சைக்கிள், கையில் இழுத்து செல்லும் ரிக்‌ஷா உள்ளிட்டவை இனிமேல் கிடையாது. தூய்மைப் பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 10 நிமிடத்தில் கற்றுக் கொள்ளும் வகையில் தான் பேட்டரி வாகனங்கள் இருக்கின்றன.

வாக்காளர் பட்டியல்

எவ்வளவு சீக்கிரம் கொண்டு வரமுடியுமோ அதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு முறையான விண்ணப்பம் மூலம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் மூத்த அலுவலர்கள் கண்காணிக்கிறார்கள்.

கூவம் நதிக்கரை பகுதி சீரமைப்பு போன்ற பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டவர்களின் பட்டியல் தயாரித்து மாற்றப்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழையால் தடைப்பட்ட சாலைப் பணிகள்

மழைக்காலத்தில் 23 இடங்கள் சவாலாக இருந்தன. மழை நீர் தேங்காமல் இருக்க துணை ஆணையர் தலைமையில் பொறியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த மழை காலத்திற்குள் இப்பிரச்னைகளை கலையமுடியும்.
சாலைகளை பொறுத்தவரை மழைக்காலமாக இருந்ததால் வேலை செய்ய இயலவில்லை. சாலைகளை தோண்டவும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் எதிர்பாரத விதமாக திடீரென ஜனவரி மாதத்திலும் மழை பொழிகிறது. போர்கால அடிப்படையில் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. விரைவாக அவை முடிக்கப்படும்.

கரோனா தடுப்பு நடவடிக்கை

சினிமா திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதி குறித்து அரசு ஆலோசனை நடக்கிறது. கரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை. குறைந்தது 2 மாத காலமாவது நாம் கவனமாக இருக்க வேண்டும். திரையரங்கு உள்ளே பொதுமக்களை அனுமதிக்கும் போது அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் இல்லாமல் அனுமதிக்கூடாது. ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நோய்த்தொற்று அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details