தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி: பட்டினப்பாக்கம் மீனவ கிராமத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு! - வட தமிழக கடலோரப்பகுதிகள்

MICHAUNG: மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மீனவ கிராமத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினார்.

MICHAUNG
பட்டினப்பாக்கத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 4:52 PM IST

பட்டினப்பாக்கத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை : மிக்ஜாம் (MICHAUNG) புயல் எதிரொலியால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நேற்று (டிச. 2) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச. 3) வடமேற்கு திசையில் நகர்ந்து காலை 05.30 மணி அளவில் மிக்ஜாம் (MICHAUNG” (pronounced as MIGJAUM)) புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது நாளை (டிச. 4) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, முற்பகலில் தெற்கு ஆந்திரா கடற்கரையான நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று (டிச.3) சூறாவளிக் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து இன்று (டிச.3) மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும் என்றும் அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று (டிச. 3) சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இன்று மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என கூறப்பட்டு உள்ளது.

இதேப்போல் நாளை (டிச.4) காலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (4, 5 ஆகிய தேதிகளில்) நண்பகல் வரை மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மாநகராட்சி ஆணையர் ஆய்வு: இதனிடையே சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மீனவர்களின் படகுகள் மீன்பிடி வலைகள், பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லபட்டது தொடர்பாகவும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் அனைவரும் திரும்பி விட்டார்களா? என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், அப்பகுதி பொது மக்களை சந்தித்து அத்தியாவசிய தேவைகள் இருக்கிறதா எனவும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் எனவும், குறிப்பாக, கடற்கரை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் - என்.ஐ.ஏ வசம் போன ஆவணங்கள்! அடுத்து என்ன நடவடிக்கை?

ABOUT THE AUTHOR

...view details