தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட 1லட்சம் மெட்ரீக் டன் குப்பைகள் அகற்றம்..! சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்..!

Chennai Corporation Commissioner: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,02,709 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Chennai Corporation Commissioner
சென்னையில் 1லட்சம் மெட்ரீக் டன் குப்பைகள் அகற்றம்..! சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 8:29 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கடந்த 12 நாட்களில் சுமார் 1 லட்சம் மெட்ரீக் டன் குப்பைகளுக்கு மேல் அகற்றப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் எதிரொலியால், வெள்ளத்திற்குப் பிறகு, தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமான குப்பைகளை அகற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 நாட்களில் அகற்றப்பட்ட விவரம்: 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, 7 நாட்களில் 57,192.63 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. இதில், 6,553.89 மெட்ரிக் டன் குப்பைகள் செடி, மரம், கிளை போன்றவை ஆகும். 6ஆம் தேதி அன்று 5,915 மெட்ரிக் டன் குப்பைகளும் 7ஆம் தேதி 6,465 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டது.

மேலும், 8ஆம் தேதி அன்று 7,705 மெட்ரிக் டன் குப்பைகளும், 9ஆம் தேதி அன்று 8,476 மெட்ரிக் டன் குப்பைகளும், 10ஆம் தேதி அன்று 8,948 மெட்ரிக் டன் குப்பைகளும், 11ஆம் தேதி 9,215 மெட்ரீ டன் குப்பைகளும், 12ஆம் தேதி 10,466.97 மெட்ரிக் டன் குப்பைகளும் 13ஆம் தேதி அன்று 11,613.19 குப்பைகளும் அகற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 14ஆம் தேதி அன்று 9,005.46 மெட்ரிக் டன் குப்பைகளும், 15ஆம் தேதி அன்று 8,659 மெட்ரிக் டன் குப்பைகளும் 16ஆம் தேதி அன்று 8,472 மெட்ரிக் டன் குப்பைகளும், 17ஆம் தேதி அன்று 7,766 மெட்ரிக் டன் குப்பைகளும் எனச் சென்னை முழுவதும் மொத்தமாக 1,02,709 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

மாநகராட்சி ஆணையர் ஆய்வு: திருவொற்றியூர் மற்றும் மணலி பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 நிலையான மருத்துவ முகாம்கள் 17 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இதில், வார்டு 2க்கு உட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு அளிக்கக் கூடிய சிகிச்சைகள் மற்றும் மருந்து இருப்புகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறியபோது, "நெட்டுக்குப்பம் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி மூலம் 12 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக 6ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 93,475 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் மற்றும் 9,234 மெட்ரிக் டன் தோட்டக் கழிவுகள் என மொத்தம் 1,02,709 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; நிவாரண பொருட்கள் பெருவதற்கான வாட்ஸ்அப் தொடர்பு எண் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details