தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்க சென்ற 11 பேருக்கு கரோனா! - Koyambedu Corona Confirmed

சென்னை: அசோக் நகர் 11ஆவது தெருவில் கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கியவர்கள் 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை கரோனா தொற்று உறுதி  கோயம்பேடு கரோனா தொற்று உறுதி  காய்வாங்கச் சென்ற 11 பேருக்கு கரோனா தொற்று  Madras corona confirmed  Koyambedu Corona Confirmed  Chennai Coronavirus infects 11 people
Koyambedu Corona Confirmed

By

Published : May 3, 2020, 11:59 PM IST

சென்னையில் தொடர்ந்து நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு சந்தை மூலம் பரவி வரும் கரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் தவிர, சென்னை முழுவதிற்கும் கோயம்பேடு சந்தை மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதனிடையே, கோயம்பேடு சந்தை மூலம் தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசோக் நகர் 11ஆவது தெருவில் இருந்து கோயம்பேடு சந்தைக்குச் சென்று, காய்கறி வாங்கியவர்கள், அதே பகுதியில் தற்காலிக காய்கறி கடையில் காய் வாங்கியவர்கள் என 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அதே பகுதியில் ஏற்கெனவே காய்கறி விற்பனை செய்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இன்று 231 பேருக்கு கரோனா: தமிழ்நாட்டில் 2,757 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details