தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்று: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னை: கரோனா தொற்று அச்சம் காரணமாக 30 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி

By

Published : Oct 22, 2020, 5:11 PM IST

சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது.

மேலும் மாநகராட்சி, சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும் நோய்த் தாக்கம் குறையாமல், தினசரி கிட்டத்தட்ட 1000 நபர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய்ப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக முதலில் ஒரு தெருவில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அந்த முழுத் தெருவையும் தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுவந்தது.

அது மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து நபர்களுக்கு கரோனா ஏற்பட்டால் மட்டுமே அந்த முழுத் தெருவையும் தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தற்போது அறிவிக்கப்பட்டுவருகிறது.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்துவருவதால் குணமடைந்தோரின் விழுக்காடு 92 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்துவருவோரின் விழுக்காடு அதிகரித்துவருவதால் 30 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 25 ஆக குறைந்துள்ளன.

இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியிலிருந்து யாரும் உள்ளே வரக்கூடாது உள்ளே இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது.

மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியலை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது. அவை:

திருவொற்றியூர் - 2

மணலி - 6

தண்டையார்பேட்டை - 6

ராயபுரம் - 5

அண்ணாநகர் - 1

தேனாம்பேட்டை - 2

கோடம்பாக்கம் - 1

அடையாறு - 1

சோழிங்கநல்லூர் - 1

இந்த 25 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான வசதிகளை மாநகராட்சி தன்னார்வலர்கள் செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details