தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமூல் வாங்கியதாக வெளியான வீடியோ... ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்த காவல் ஆணையர்!

சென்னை: வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கையூட்டு பெறுவதாக வீடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து அவரை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

chennai commissioner  சென்னை காவல் ஆணையர்  சென்னை செய்திகள்  chennai news  bribery police transfer
மாமூல் வாங்கியதாக வெளியான வீடியோ...ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்த காவல் ஆணையர்

By

Published : Aug 20, 2020, 4:36 AM IST

வடபழனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஜி. கண்ணன், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பது போலவும், அவரிடமிருந்து கவரில் பணம் வாங்கி பாக்கெட்டில் வைத்துச் செல்வது போலவும் வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோவில் பதிவான நிகழ்வு, ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வடபழனி பகுதியில் சூதாட்ட கிளப், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வாளர் கண்ணன் கையூட்டு வசூலிப்பதாகக் கூறி காவலர்கள் வாட்ஸ்அப் குழுவில் இவ்வீடியோ பரவிவருகிறது.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆய்வாளர் கண்ணனிடம் கேட்டபோது, வீடியோவில் பதிவான சம்பவம் கரோனா ஊரடங்கிற்கு முன்பு நடந்த சம்பவம் என்றும், தனிப்பட்ட முறையிலான கொடுக்கல் வாங்கலைச் சித்தரித்து தன்னைப் பழிவாங்கும் நோக்கில் காவல்துறையில் உள்ள சிலர் செயல்படுவதாக விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் நடத்திய ரகசிய விசாரணையில் அந்த வீடியோவில் பழயை வீடியோ என தெரியவந்துள்ளது. ஆனால், பணம் வாங்கினாரா என்பது தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் கண்ணனை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வடபழனி காவல் ஆய்வாளர் மசாஜ் சென்டர், சூதாட்ட கிளப்களிடமிருந்து மாமூல் வாங்கினாரா?

ABOUT THE AUTHOR

...view details