தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 இடங்களில் நிரந்தர கரோனா பரிசோதனை நிலையம் - ஆணையர் பிரகாஷ் - சென்னை ஆணையர் பிரகாஷ்

சென்னை: ஒரு மண்டலத்தில் இரண்டு இடங்களைத் தேர்வுசெய்யப்பட்டு 30 இடங்களில் நிரந்தர கரோனா பரிசோதனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Commissioner Prakash
Commissioner Prakash

By

Published : Apr 21, 2021, 2:03 PM IST

சென்னை தரமணியில் தயார் நிலையில் இருந்த கரோனா பாதுகாப்பு மையத்தை ஆணையர் பிரகாஷ் ஆய்வுசெய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் கூறியதாவது, "மக்கள் உடலில் ஏதாவது அறிகுறி இருந்தால் கரோனா பரிசோதனை மேற்கொள்ள தினமும் வீட்டுக்கு வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கூற வேண்டும். சென்னையில் இறப்பைக் குறைக்க வேண்டும் என்பது நோக்கம்.

நாள்தோறும் பணிக்குச் செல்பவர்கள் 140 ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம். ஒரு மண்டலத்தில் இரண்டு இடங்களைத் தேர்வுசெய்யப்பட்டு 30 இடங்களில் நிரந்தர கரோனா பரிசோதனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் 60 முதல் 65 விழுக்காடு மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 கரோனா பாதுகாப்பு மையத்தில் 12 ஆயிரத்து 600 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 1,710 படுக்கைகள் நிரம்பியுள்ளன.

10,000 மேல் படுக்கைகள் தயார் நிலையில் வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இன்றைய தினம் 28,005 நபர்கள் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இரண்டு லட்சம் தடுப்பூசி சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 21,000 மாநகராட்சி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு மையங்களில் சித்தா கோவிட் கேர் சென்டர் தயார்செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு மருத்துவர்கள் இருப்பார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இன்றைய தினம் 12,533 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

1,719 நபர்கள் கரோனா பாதுகாப்பு மையத்தில் உள்ளனர். 12,185 நபர்கள் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு மையத்தில் 20 மருத்துவர்கள் சுழற்சி மையத்தில் பணியில் இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details