காவல் துறையினருக்கு புதிய காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு!
18:52 July 03
சென்னை: கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணியவேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பாக சிகிச்சையளித்து வருகிறது. கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றவேண்டும். முகக்கவசங்களை கட்டயமாக அணிய வேண்டும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களை ஹோட்டலில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்” என தெரிவித்தார்.