சென்னைக்கு திருப்பத்துாரில் இருந்து எஸ்.சி.டி.வி. பேருந்து ஒன்று நெற்குன்றம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பேருந்தின் ஓட்டுநர் ரமேஷ் (55) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஓட்டுநர் பேருந்தை அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். பேருந்து திடீரென நின்றதைக் கண்ட பயணிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.