சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் தேநீர் கடை நடத்திவருபவர் அக்பர் பாஷா. இவரது கடைக்கு நேற்று (செப்.11) தேமுதிக வட்டச் செயலாளர் ஆண்ட்ரூஸ், இவரது மூன்று நண்பர்கள் வந்து தேநீர், வடை சாப்பிட்டுவிட்டு காசு தராமல் செல்ல முற்பட்டனர்.
இதையடுத்து கடைக்காரர் ஆண்ட்ரூஸிடம் பணத்தைக் கேட்டதற்கு, 'நான் யாருனு தெரியுமா, எங்கிட்டயே பணம் கேக்கிறியா?' என்று மிரட்டியதோடு, தகாத வார்த்தையால் திட்டியும், கடையில் இருந்த பிஸ்கட் பாட்டிலை எடுத்து கடை முன்பு நடைபாதையில் உடைத்தும் மற்ற பொருள்களையும் கீழே தள்ளிவிட்டும் சென்றுள்ளார்.
இதனால், தேநீர் கடை உரிமையாளர் அக்பர் பாஷா, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்து தேமுதிக வட்டச் செயலாளர் ஆண்ட்ரூஸ் மீது ஆபாசமாகத் திட்டுதல், பொருள்களைச் சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.
அப்போ 'ஓசி பிரியாணி' அவங்க, இப்போ 'ஓசி டீ' இவங்க...! கடையை அடித்து நொறுக்கிய தேமுதிக தேநீர் பிரியர்! - சென்னையில் தேமுதிக வட்டச்செயலாளர் கைது
சென்னை: தேநீர் குடித்துவிட்டு காசு தராமல் கடையை அடித்து நொறுக்கிய தேமுதிக வட்டச் செயலாளரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
dmdk
மேலும் இவர்மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையம், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றதாகப் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆண்ட்ரூஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.