தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்! - பராமரிப்புப் பணிகள்

சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஏப்.16ஆம் தேதி இந்துக் கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நாளை நிற்காமல் செல்லும் எனத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆவடியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ஆவடியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்

By

Published : Apr 15, 2021, 8:12 PM IST

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்துக் கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நாளை நிற்காமல் செல்லும் எனத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்:

1. சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 09:30, 09:45, 11:30, பகல் 12:00, மதியம் 1:00 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள்.

2. சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 09:50 , 11:05, பகல் 12:50 மணிக்கு அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள்.

3. சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10:00, 11:45 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்கள்

4.சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10:30, பகல் 12:10 மணிக்கு கடம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில்கள்

5. வேளச்சேரியிலிருந்து காலை 09:05 மற்றும் பகல் 12:15 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள்

6. வேளச்சேரியிலிருந்து காலை 11:20 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்.

7. சென்னை கடற்கரையிலிருந்து காலை 10:20 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் சுற்றுவட்டப் பாதை ரயில்
ஆகிய 16 ரயில்கள் இந்துக் கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நாளை நிற்காமல் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் சிறப்பு ரயில்கள் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்பவை:

1.வேளச்சேரியிலிருந்து காலை 09:15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும் ரயில்.

2.சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 11:15, பகல் 12:20 மற்றும் மதியம் 1:15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும் ரயில்கள் ஆகிய 4 புறநகர் ரயில்கள் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் நாளை நிற்காமல் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அகல பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details