சென்னை அண்ணா நகர் நான்காவது பிரதான சாலையில் வசித்து வருபவர் செல்லதுரை (66). இவர் பூவிருந்தவல்லியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகின்றார். கடந்த 26ஆம் தேதி செல்லதுரை கடைக்கு சென்ற பின்னர் இவரது வீட்டிற்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று தாங்கள் காவல் துறையினர் எனக் கூறியுள்ளனர்.
அண்ணா நகரில் வீடு வீடாக சென்று ரெய்டு நடத்தும் போலி போலீஸார் - சிக்கிய வீடியோ! - அண்ணாநகர் போலி போலீஸ்
சென்னை: அண்ணா நகரில் கடந்த மூன்று நாள்களாக நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் துறையினர் எனக் கூறி வீடு வீடாக சென்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
cctv
பின்னர் அந்த கும்பல் செல்லதுரை வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் 30 நிமிடங்கள் சோதனை நடத்தினர். சோதனை முடித்த பின்னர் அவர்கள் மீண்டும் வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து எந்த பொருளையும் எடுக்காமல் காரில் ஏரி சென்றுவிட்டனர்.
பின்னர் செல்லதுரை தனது வீட்டில் சோதனை நடத்தி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்தார். இதனையடுத்து இதே கும்பல் அண்ணாநகர் சிந்தாமணி அருகே உள்ள ஒரு வீட்டில் காவல் துறையினர் எனக் கூறி சோதனை நடத்த சென்றனர். அப்போது வீட்டு உரிமையாளர் உள்ளே அனுமதிக்காததால் அந்த கும்பல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த சில நாள்களாக அண்ணா நகர் பகுதியில் டாடா சுமோ காரில் ஒரு கும்பல் காவல் துறையினர் எனக்கூறி வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் சுற்றி திரியும் இந்த கும்பல் உண்மையான காவலர்களா, அல்லது போலி காவலர்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அந்தக் கும்பல் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளையும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஓப்படைத்து புகார் அளித்துள்ளனர்.