அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகத்தில் உள்ள வானூர்தி துறையின் கீழ் செயல்படும், ட்ரோன்கள் வடிவமைக்கும் தக்ஷா குழு, நாட்டில் ட்ரோன்கள் வடிவமைப்பில் முன்னனியில் உள்ளது.
மத்திய விமான போக்குவரத்து துறை இந்தியாவில் 5 நிறுவனங்களுக்கு ட்ரோன்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்க உள்ளது. அந்த வகையில் ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதல் நிறுவனமாக தக்ஷா குழுவை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.