சென்னை: Chennai to Frankfurt Lufthansa Flight:ஃப்ராங்ஃபர்ட் - சென்னை இடையே வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 3 ஆண்டுகளுக்குப் பின்பு வாரத்தில் 7 நாட்களும் இயங்கக் கூடிய தினசரி விமான சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெர்மன் நாட்டின் ஃப்ராங்ஃபர்ட் நகருக்கு லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் ஃப்ராங்ஃபர்ட் நகரில் இருந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் இருப்பதால், சென்னை - ஃபிராங்பார்ட் - சென்னை, லுப்தான்ஷா விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிந்தன.
லண்டன், நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, பாரிஸ், ரோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள், இந்த விமானத்தை இணைப்பு விமானமாக பயன்படுத்துவதால், வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்பட்ட லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. இதையடுத்து இந்த விமானத்தை தினசரி விமான சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
இதையும் படிங்க:"வாதங்களை தொடங்காவிட்டால் அரசின் விளக்கங்களை கேட்காமலே தீர்ப்பு வழங்கப்படும்" - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!