தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தன்பால் உறவுக்கு மறுத்தவரை கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறிப்பு: ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை: தன்பால் உறவுக்கு இணங்க மறுத்த நபரை கத்தியால் தாக்கி செல்போன், பணத்தைப் பறித்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

arrest
arrest

By

Published : Sep 8, 2020, 1:23 PM IST

சென்னை அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (53.) போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி நாகராஜ் தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காகப் பேருந்தில் பிராட்வே சென்றுள்ளார்.

பின்னர் இரவு நேரத்தில் பேருந்து இல்லாததால் அவர் ஆட்டோவில் ஏறி அண்ணா வளைவு (ஆர்ச்) பகுதியில் இறங்கியுள்ளார்.

அங்கிருந்து வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ஆட்டோவில் வந்த ஓட்டுநர் ஒருவர், நாகராஜிடம் அவரும் அரும்பாக்கம் வழியாகச் செல்வதாகக் கூறியதால் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் சார்லஸ்
அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே அந்த நபர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நாகராஜை தன்பால் உறவுக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் நாகராஜ் இதற்கு மறுத்ததால் அந்த நபர் கத்தியால் தாக்கி கையில் வைத்திருந்த 500 ரூபாய் பணம், செல்போனைப் பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நாகராஜ், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர்.

அப்போது சிசிடிவியில் அந்த நபரின் ஆட்டோ எண் பதிவாகியிருந்தது, அதனடிப்படையில் காவல் துறையினர் அந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மதுரவாயல் பகுதியில் அந்த ஆட்டோ இருப்பதாக காண்பித்ததால் உடனடியாக விரைந்துசென்று அந்த நபரைக் கைதுசெய்தனர்.

படம் 2

விசாரணையில் அமைந்தகரை கதிரவன் காலனியைச் சேர்ந்த கொரில்லா என்கிற சார்லஸ் (25) எனத் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து ஆட்டோ, பட்டாகத்தி, செல்போன் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்த பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details