சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 50 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், கொல்கத்தா, அகமதாபாத், வாரணாசி, கவுஹாத்தி, ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், கடப்பா, ராஜமுந்திரி, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் பயணிக்க சுமாா் 3 ஆயிரத்து 400 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
அதேபோல் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு சுமாா் 2 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா். இன்று ஒரே நாளில் சென்னையில் 50 விமானங்கள் இயக்கப்பட்டு சுமாா் ஐந்தாயிரத்து 400 போ் பயணிக்கின்றனா்.