தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்: மடக்கிய சுங்கத்துறை! - Gold chain smuggling

சென்னை: துபாய், மலேசியா, கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 81 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

chennai
chennai

By

Published : Dec 16, 2019, 4:41 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முஸ்தாக் அகமது (22) என்பவரை சந்தேகத்தின் பேரில், சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாகப் பேசியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அவரது உடமைகளில் எதுவும் இல்லாததால், தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவர் உள்ளாடைக்குள் தங்க சங்கலி, தங்க கட்டியை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 298 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

அதேபோல், கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த, அஞ்சனா நிரஜ் நெல்சன் (37), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் சாகுல் அமீது (28), ரகுமான்கான் (21), மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த ரியாஸ் முகமது (31), ரகமத்துல்லா (28) ஆகியோரை சோதனை செய்தனர். அவர்கள் உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். ஐந்து பேரிடம் இருந்தும் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் அனைவரும் தங்கத்தை எதற்காக, யாருக்காக கடத்திவந்தனர் என்று சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ’அயன்’ பட பாணியில் நடைபெற்ற கடத்தல் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details