இலங்கை, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திவருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் இலங்கை, துபாயில் இருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை தீவர சோதனை மேற்கொண்டனர்.
அதில் சென்னை, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, மும்பை, புதுக்கோட்டை, இலங்கை ஆகிய இடங்களை சேர்ந்த 24 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அலுவலர்கள் அவர்களை தனி இடத்திற்கு கொண்டு சென்று அவர்களை சோதனை செய்தனர்.