மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் பயணிகளை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, பஞ்சாப் மாநிலம் மகிழ்பூரைச் சேர்ந்த மக்கான் சிங்(32) என்பவரை சோதனையிட்ட அலுவலர்கள், இவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.
பஞ்சாப் போலீஸ் தேடிய நபர் சென்னை விமான நிலையத்தில் கைது! - arrest
சென்னை: பஞ்சாப் காவல்துறையினரால் இரண்டு ஆண்டுகளாகத் தேடப்பட்ட நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் காவல்துறையினரால் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
பின்னர், ஒரு தனி அறையில் அவரை அடைத்து வைத்த அலுவலர்கள், இது தொடர்பாக பஞ்சாப் மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்களும் சென்னைக்கு வந்து இவரை அழைத்துச் சென்றனர்.
மேலும், இவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளதாகவும், இவருடைய மனைவி கொடுத்த புகாரின் பேரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் தேடப்பட்டு வருவதாகவும் பஞ்சாப் காவல் துறையினர் கூறியுள்ளனர்.