சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தினை கற்பிக்கும் பள்ளிகள் கோடைவிடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையின் நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் கோடை மழை தொடங்காமல், வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் வெளியிலின் தாக்கம் குறைந்த பின்னர் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறுத் தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், பள்ளிகள் திறக்கப்படும் என்பதை மாற்றி, ஜூன் 7ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். மேலும் இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட இந்த தேதிக்கு முன்பாக எந்த பள்ளியும் திறக்கப்படக் கூடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:தேசிய நெடுஞ்சாலையில் காரை குறிவைத்து கொள்ளை - காவல் துறை அளித்த விளக்கம்