சென்னை சூளைமேட்டில் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை சூதாட்டமாக மாற்றி, அதன் அடிப்படையில் பலர் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இம்முறைகேட்டில் மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெய்ஷா தலைமையில், சவுகார்பேட்டை ராகுல் ஜெயின் மற்றும் தினேஷ் வி.குமார் உள்ளிட்டோர் ஈடுபடுவதாகவும் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரோனக்சோர்டியா என்பவர், பல லட்சம் ரூபாய்களை ஜெய் ஷா குழுவினரோடு இணைந்து, இணையவழி கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.