சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சங்கையா. இவர் தன்னை நூதனமான முறையில் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரும்பாக்கம் காவல் நிலையத்திலும், அண்ணாநகர் துணை ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார்.
பெண் மீது மோசடி புகார்: சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு - தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
சென்னை: மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட நபர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக மூன்று வாரங்களில் விளக்கமளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அண்ணாநகர் காவல் நிலையம் முன் சங்கையா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதையடுத்து, சங்கையா அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.