தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார்: சிபிசிஐடி விளக்கமளிக்க உத்தரவு - சிபிசிஐடி விளக்கமளிக்க உத்தரவு

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

arya
arya

By

Published : Jul 28, 2021, 9:25 PM IST

திருமணம் கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில் சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக் கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா, என்னிடம் 70 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பணத்தை திரும்ப கேட்டபோது, தன்னுடைய வீட்டுக் கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்னும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் 'அரண்மனை-3', 'இரண்டகம்' என்ற மலையாள படம் வெளியானால் எனது மனுதாரருக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் என வாதிட்டார்.

மேலும், சிபிசிஐடி'யிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: படப்பிடிப்பிற்காக மெட்ரோவில் பயணம் செய்த ஆர்யா

ABOUT THE AUTHOR

...view details