தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு - Ordinance

தகவல் தொழில்நுட்பவியல் துறை "தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு
தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

By

Published : Jul 22, 2022, 5:11 PM IST

சென்னை: மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தகவல் தொழில்நுட்பவியல் துறை கடந்த 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத்துறை பெயர் மாற்றம் செய்யப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும் எனவும், ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன் முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கை வழியில் அணுகுமுறை தேவைப்படுவதாக, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளில் வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் "தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை" என மறுபெயரிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஸ்ரீமதி உடலைப்பெற ஒப்புக்கொண்ட பெற்றோர் - நாளை மாலைக்குள் இறுதிச்சடங்கை முடிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details