தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு

Tamil nadu weather report: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தின் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 5:20 PM IST

Updated : Oct 13, 2023, 8:47 PM IST

சென்னை:தென்தமிழக பகுதிகளிள் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 18ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று (அக்.13) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்பு: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு எப்படி?சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் மழை பதிவு: சிற்றாறு (கன்னியாகுமரி) 10 செ.மீ, திற்பரப்பு (கன்னியாகுமரி) 9 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. வெம்பக்கோட்டை (விருதுநகர்), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி) பகுதிகளில் தலா 6 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. மேலும் சாத்தூர் (விருதுநகர்), சிவலோகம் (கன்னியாகுமரி), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), ஆண்டிபட்டி (தேனி) பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும், கிளன்மார்கன் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி) பகுதிகளில் தலா 4 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது என்றும், மேலும் சில மாவட்டங்களில் 3 செ.மீ. முதல் 1 செ.மீ வரை மழைப்பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இதையும் படிங்க: நாத்து நடும் நார்த் இந்தியர்கள்.. தமிழகத்தின் கடைகோடி வரை!

Last Updated : Oct 13, 2023, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details